மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் இதுவரை 28 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு நேரடி வங்கிக் கணக்குகள் வாயிலாக பரிமாறப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை நடத்திய சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 3 புள்ளி 5 லட்சம் கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளும், 80 ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஏழைகளின் மேல்தான் மத்திய அரசின் கவனம் இருப்பதாக தெரிவித்த அவர், முழு திறனுடன் நாட்டின் விரைவான வளர்ச்சியை நோக்கி உழைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : ஈஷா மகாசிவாரத்திரி: தமிழ்நாட்டிற்கு வருகை தரும் குடியரசு தலைவர்...!
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் இதுவரை 28 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்குகளின் வாயிலாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், மெட்ரோ திட்டத்தில் இந்தியா இன்று 5-வது இடத்தில் உள்ளது எனவும், விரைவில் இந்தியா 3வது இடத்தைப் பிடிக்கும் எனவும் சூளுரைத்தார். பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் நாட்டின் உட்கட்டமைப்பு கட்டுமானம் துரிதமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.