முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஒரு விஞ்ஞானியாக சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த டாக்டர் கலாமின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி.
“நமது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள். ஒரு விஞ்ஞானியாகவும் குடியரசு தலைவராகவும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்தவர். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பெரிதும் போற்றப்படுகிறார்.” என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.