இந்தியா

சனாதன ஒழிப்பு சர்ச்சை... அமைச்சர் உதயநிதிக்கு எதிரான மனு இன்று விசாரணை!!

Malaimurasu Seithigal TV

சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி இந்து மதம், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

அந்த மாநாட்டில், டெங்கு, மலேரியா கொசுக்களை போன்று, சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். அவர் பேசிய கருது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சாமியார் உதயநிதி தலைக்கு விலை வைத்தார். அந்த சம்பவம் மேலும் சர்ச்சையை கிளப்பியதுடன் தமிழ் அரசியல் வட்டாரங்களுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.நாடு முழுவதும், அமைச்சர் உதயநிதியின் மேல் புகார்கள் குவிந்து வந்தன. 

இந்நிலையில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத், அரசியலமைப்பை மீறிய முரணான செயல் என்று அறிவிக்கக் கோரியும் இந்த மாநாட்டுக்கு தமிழீழ விடுதலை புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடுமாறும் மனு தாக்கல் செய்துள்ளார். மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.