இந்தியா

தொடரும் கலவரம்...பெட்ரோலுக்கு வந்த நெருக்கடி...காத்திருக்கும் மக்கள்!

Tamil Selvi Selvakumar

மணிப்பூரில் தொடர் வன்முறையால் பெட்ரோலுக்காக  மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மொய்தி சமூகத்தினரை, பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது.  

அப்போது ஏற்பட்ட கலவரத்தால், மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கலவரம் நடந்த பகுதிகளில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொடி அணிவகுப்பை நடத்தினர். 

இருப்பினும் தொடர்ந்து, மணிப்பூரில் கலவரம் நீடித்து வந்த நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர கலவரக்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கு மாநில ஆளுநர் அனிஷியா உய்கே உத்தரவிட்டார். மேலும், அம்மாநிலத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள தொடர் கலவரம் காரணமாக, பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.