இந்தியா

எல்லை விவகாரம்: 2 முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை...அனுமதி மறுத்த மாநிலங்களவை...!

Tamil Selvi Selvakumar

எல்லை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்காததால் மக்களவை அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

எல்லை பிரச்னை விவகாரம்:

நாடாளுமன்ற மக்களவை தொடங்கியதும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. eல்லையில் இந்திய - சீன வீரர்கள் மோதல் விவகாரம் பற்றி விவாதிக்க கோரி தொடர் கூச்சலிட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அமளி நீடித்ததால் மக்களவை தொடங்கிய 15 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது. 

2 மணி வரை ஒத்திவைப்பு:

மீண்டும் 12 மணிக்கு கூட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, அதே பிரச்சனையை எழுப்பி  அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல்  2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எல்லை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்காததால் மக்களவை அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்:

அதேபோல், மாநிலங்களவையில் எல்லை பிரச்சனை தொடர்பாக விவாதிக்கக் கோரி மல்லிகார்ஜுன கார்கே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், மாநிலங்களவையில்  அனுமதி மறுக்கப்பட்டதால்  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.