இந்தியா

இரண்டு செய்தி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது ... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆளும் கட்சியை விமர்சித்தாக ஆந்திராவில் இரண்டு தனியார் செய்தி சேனல்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை, அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ரகுராம கிருஷ்ணம் ராஜூ தொடர்ந்து விமர்சித்து வந்தார். கொரோனா சூழலை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை என்று அவர் விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து அவர் கடந்த மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது ஆளும் கட்சிக்கு எதிராக பேசிய கருத்துகளை அனைத்து டிவி சேனல்களும் ஒளிபரப்பின. அப்படி ஒளிபரப்பு செய்த டிவி 5, ஏபிஎன் ஆந்திரா ஜோதி ஆகிய சேனல்கள் மீது ஆந்திர மாநில அரசு தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தது

இதனையடுத்து டிவி சேனல்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அதில் ஆந்திர அரசின் செயல்பாடு ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி , இரண்டு டிவி சேனல்கள் மீதும் ஆந்திர அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டார் .