இந்தியா

இ-ஃபில்லிங் போர்ட்டலில் குறைகள்... நிவர்த்தி செய்ய நிர்மலா சீதாராமன் உத்தரவு

வருமான வரித்துறையின் புதிய இ-ஃபில்லிங் போர்ட்டலில் உள்ள குறைபாடுகளை நீக்க இன்போசிஸ் நிறுவனத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். 

Malaimurasu Seithigal TV
நாட்டில் வரி செலுத்துவோர் வீட்டில் இருந்தபடி ஆன் வாயிலாக எளிய முறையில் கணக்கை தாக்கல் செய்ய ஏதுவாக புதிய இ-ஃபில்லிங் போர்ட்டல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் புதிய வருமான வரி போர்ட்டலின் பல அம்சங்கள் செயல்படவில்லை என்றும் புதிய ஐ-டி இ-ஃபைலிங் போர்டலில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்ஃபோசிஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி போர்ட்டலில் உள்ள குறைபாடுகள் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் குறைபாடுகளை நீக்கவும் , இ-ஃபில்லிங் போர்ட்டல் பயனாளிகள் எளிய வழியில் பயன்படுத்தும் வகையில் மாற்றவும் கேட்டுக் கொண்டுள்ளார்.