இந்தியா

களைகட்டும் மைசூரு தசரா விழா..!

Malaimurasu Seithigal TV

3 நாள் பயணமாக இன்று கர்நாடகா வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.

மைசூரு தசரா திருவிழா:

கர்நாடக மாநிலம், மைசூருவில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 413வது மைசூரு தசரா திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் 5ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை யொட்டி, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு:

இந்நிலையில் 3 நாள் பயணமாக இன்று கர்நாடகா வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று மைசூர் தசரா திருவிழாவை தொடங்கி வைக்கிறார். தசரா திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் லட்சக்கணக்கான மக்கள் மைசூருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மைசூர் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கிரையோஜெனிக் என்ஜின்கள்:

தொடர்ந்து, தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை திறந்து வைக்கும் குடியரசுத் தலைவர், நாளை பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தியையும் தொடங்கி வைக்கிறார்.