இந்தியா

4.4% க்கும் அதிகமான இந்தியர்கள் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு - ஆய்வில் தகவல்

Malaimurasu Seithigal TV

இந்திய மக்கள் தொகையில் 4.4 சதவீதம் பேர் கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய உயர் மருத்துவ நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்களும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இந்தியாவில் பூஞ்சை நோய் அடிக்கடி காணப்படுகிறது. இதில் நாடு முழுவதும் 5 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரத்து 826 பேர் பல்வேறு வகையான கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 சதவீதம் பேர் அச்சுறுத்தும் கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் எய்ம்ஸ் நிறுவனம், நாட்டில் பல்வேறு பூஞ்சை தொற்றுகளின் அதிர்வெண் அல்லது சுமையை முதலில் வரையறுத்துள்ளது. 

-- சுஜிதா ஜோதி