இந்தியா

புதுச்சேரி : இணைய வழி மோசடி புகாருக்கு கைப்பேசி எண்...! வெளியிட்ட சைபர் போலீசார்..!

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் இணைய வழியில் மோசடியில் ஈடுப்படுபவர்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக புகார் அளிக்கும் வகையில் சைபர் க்ரைம் போலீசார் கைபேசி எண்ணை வெளியீட்டுள்ளனர்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணைய வழி குற்ற சம்பவங்களை தடுக்க சைபர் க்ரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் வகையில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”தற்போது மோசடிக்காரர்கள் புதிய வகை மோசடியாக நீங்கள் ஆர்டர் செய்யாத ஒரு பொருள் வந்துள்ளதாக ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து கூறுவார். அப்போது நீங்கள் நான் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை என்று மறுப்பீர்கள். அந்த மோசடிக்காரர் நீங்கள் ஆர்டர் செயவில்லை என்றால் நான் அதை கேன்சல் செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும் அதை சொல்லுங்கள் என்பார். நீங்கள் அவர் சொல்வதை நம்பி OTP எண்ணை கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் உடனடியாக எடுக்கப்படும்” என தெரிவித்து உள்ளனர்.

மேலும் இது போல் ஏதேனும் இணைய வழி மோசடி சம்பவங்கள் நடைபெற்றால் பொது மக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் 9489205246 என்ற கைபேசி எண்ணை வெளியிட்டுள்ளனர், இந்த எண்ணிற்கு பொது மக்கள் அளிக்கும் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.