இந்தியா

நாகலாந்து, மேகாலயா தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

Tamil Selvi Selvakumar

சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரப்படி காலை 11 மணி வரை, மேகாலயாவில் 26 புள்ளி 70 சதவீதமும், நாகாலாந்தில் 35 புள்ளி 76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், சோகியாங் தொகுதி தவிர்த்து மீதமுள்ள 59 தொகுதிகளில் வாகுப் பதிவு தொடங்கியது. தொடர்ந்து வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில், காரோ மலையில் உள்ள டுரா வாக்குச்சாவடியில், முதல் ஐந்து வாக்காளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. 

இதேபோல் நாகாலாந்தில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 291 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலை முதலே வாக்கு செலுத்த தொடங்கியுள்ளனர். அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கசெட்டோ கிமினி போட்டியின்றி தேர்வால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி  மேகாலயாவில் 12 புள்ளி ஒரு சதவீதமும், நாகாலாந்தில் 15 புள்ளி 8 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, மேகாலயாவில் 26 புள்ளி 70 சதவீதமும், நாகாலாந்தில் 35 புள்ளி 76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.