மணிப்பூர் பாலியல் வழக்கு தொடர்பாக CBI விசாரித்து வரும் 21 வழக்குகளை அசாமின் கவுகாத்தி உயர்நீதிமன்றம் ஆன்லைனில் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குகி பழங்குடியினர் - மெய்டி இனத்தவர் கலவரத்தால் 160க்கும் மேற்பட்டோர் மாநிலத்தில் உயிரிழந்ததோடு, பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாகினர்.
இந்நிலையில் தொலைவு-பாதுகாப்பு பிரச்சனைகளை கருத்தில்கொண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றம் ஆன்லைனில் வழக்கு விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டோர் நேரில் ஆஜராக நினைத்தால் அனுமதி அளிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக உரிய இணைய சேவையை வழங்கி நியாயமான விசாரணையை மணிப்பூர் அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்திற்கான நீரை பங்கிட்டு தராவிட்டால் கூட்டணி விட்டு வெளியேறு என தமிழக முதல்வர் சொல்ல வேண்டும்” - சீமான்.