மாணிக் சாஹா நேற்று மாலை ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவை சந்தித்து திரிபுராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பதவியேற்பு நிகழ்ச்சி அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திரிபுரான் முதல்வராக மாணிக் சாஹா இரண்டாவது முறையாக பதவியேற்றார். திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கூட்டத்தில் அவரது பெயர் முதலமைச்சராக அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடந்து இன்று வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் முதலமைச்சராக மாணிக் சாஹா இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார்.
ஆளுநர் சத்யதேவ் நாராயணனால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அவருடன் ரத்தன்லால் நாத், பிரஞ்சித் சிங்ஹா ராய், சந்தனா சக்மா, டிங்கு ராய், பிகாஷ் தேபர்மா உள்ளிட்ட 8 அமைச்சர்களுக்கும் ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் ஐந்து பேர் புதிய முகங்கள், அதே சமயம் முந்தைய அமைச்சரவையில் அங்கம் வகித்த நான்கு அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: விபத்தில் இருந்து தப்பித்த விமானம்...!!!