இந்தியா

மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

Malaimurasu Seithigal TV

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசியுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் கொல்கத்தாவில் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவை எதிர்க்க எதிர்கட்சிகள் ஒற்றுமை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  மேலும் டெல்லியில் உயர் அதிகாரிகளின் பணி நியமனம், மற்றும் பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் சந்தித்து பேசியிருந்தார். மேலும் நேற்று நிதீஷ்குமார் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தார். அப்போது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மேலும் பாஜக தவிர மற்ற எதிர்கட்சிகள் அனைத்தும் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் சந்திப்பானது தேசிய அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  
.
இதையும் படிக்க:சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!