இந்தியா

நீதிபதிகள் தேர்வுக் குழுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-இந்திய சட்ட அமைச்சர்!

உச்சநீதிமன்ற தேர்வுக்குழு பரிந்துரைக்கும் யாரையாவது அரசு ஏற்கவில்லை எனில், அதற்குப் போதிய காரணங்களைத் தெரிவித்தாக வேண்டும்.

Malaimurasu Seithigal TV

நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் தேர்வுக் குழு 

நீதிபதிகள் தேர்வுக் குழு(Collegeium)  என்பது இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக்குழுவின் பணி, உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே இதன் பணி ஆகும்.

நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் நபரை நீதிபதியாக நியமிக்கும்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவருக்கு தெரிவிப்பார். உச்சநீதிமன்ற தேர்வுக்குழு பரிந்துரைக்கும் யாரையாவது அரசு ஏற்கவில்லை எனில், அதற்குப் போதிய காரணங்களைத் தெரிவித்தாக வேண்டும். இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம்தான் உள்ளது என நீதிபதிகள் தேர்வுக் குழு எடுத்துரைத்துள்ளது.

சட்ட அமைச்சரின் கருத்தரங்க உரை

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற வழக்குரைஞர்கள் கருத்தரங்கில் இந்திய ஒன்றியத்தின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு பேசினார். அப்போது நீதித் துறையின் உயர்நிலை நியமனங்கள் நிலுவையில் உள்ளதாகவும் அதற்குக் கொலிஜீயம் முறைதான் காரணம் என்றும் கூறினார். இதன் காரணமாக நீதித் துறையின் உயா் நிலை  நியமனங்களை விரைவுபடுத்த கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் பாஜக நீதித்துறையையும் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.