திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் மாநிலத்தில் வேலையின்மை விகிதம் குறித்து பல கேள்விகளை எழுப்பினார். கேரள இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது என்றும், இளைஞர்கள் வெளியேறுவதைத் தடுக்க மாநில அரசு கொள்கைகளை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
கல்வியறிவு இருந்தும்:
பெருன்னாவில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய தரூர், ”ஜூன் 2022 இல், கேரள இளைஞர்களிடையே வேலையின்மை 40 சதவீதமாக இருந்தது. கேரளாவைத் தவிர வேறு எந்த மாநிலமும் இளைஞர்களிடையே வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்பது முக்கியமானது.
மற்ற மாநிலங்களில், படிக்காத அல்லது திறமையற்றவர்களுக்கு வேலை இல்லை எனக் கூறுகிறார்கள் எனில் கேரளாவில் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள் படித்தவர்கள் மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள். இருந்தும் அவர்களில் பலருக்கு வேலை இல்லை.” என விமர்சனம் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்தோர்:
3.5 லட்சம் பொறியாளர்களும், 9,000 மருத்துவ பட்டதாரிகளும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 71 சதவீதம் பேர் ஐடிஐ சான்றிதழ் பெற்றுள்ளனர்.
தீர்வு என்ன?:
கேரளாவில் இந்த நிலையை சமாளிக்க, அரசு அதிக முதலீட்டை கொண்டு வர வேண்டும் என்றார் தரூர். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் பல இளைஞர்கள் வேலைக்காக மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதாகவும், இது கேரளாவுக்கு ஏற்பட்ட இழப்பாகவே பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: குடியுரிமையை மீட்டெடுப்பாரா ராஜபக்சே?!!