இந்தியா

சூனியம் மற்றும் மாந்திரீகம் தொடர்பான வழக்கில் கேரள அரசின் பதில்!!

Malaimurasu Seithigal TV

மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை இயற்றுவது குறித்து தற்போது ஆலோசித்து வருவதாக கேரள மாநில அரசு உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

நரபலி:

மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மனித நரபலி சம்பவத்தில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் துண்டாக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு:

"சூனியம் மற்றும் மாந்திரீகம் போன்ற மூடநம்பிக்கை தொடர்பான மனித தியாகங்கள் மற்றும் பிற வகையான தாக்குதல்களின் பல வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடவுளின் அருளுக்காகவும், நிதி ஆதாயத்திற்காகவும், வேலை கிடைக்கவும், குடும்ப பிரச்சனைகளை தீர்க்கவும், குழந்தை பிறப்புக்காகவும், இன்னும் பல ஆசைகளுக்காகவும் சிலர் சூனியம் மற்றும் மாந்திரீகம் செய்கிறார்கள், அதில் தாழ்த்தப்பட்ட மக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்க,” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை:

சூனியம் மற்றும் மாந்திரீகம் போன்ற மூடநம்பிக்கை பழக்கங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி கேரள யுக்தி வாடி சங்கம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணை செய்தது.

தீர்ப்பு:

விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை செய்து சட்டம் இயற்ற கேரள மாநில அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. 

கேரள அரசு பதில்:

அதற்கு பதிலளித்த கேரள மாநில அரசு மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை இயற்றுவது குறித்து தற்போது ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

                                                                                                                                         -நப்பசலையார்