இந்தியா

கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!

Malaimurasu Seithigal TV

கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி(79),  உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூரூவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டப் பேரவை தொகுதியிலிருந்து 1970 ஆம் ஆண்டு, முதல் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து 50 ஆண்டுகள் ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு முறை அமைச்சராகவும் ஒரு முறை எதிர்கட்சித் தலைவராகவும் இரு முறை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால், சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில், அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிய நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.25 மணியளவில், முன்னாள் கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார். முன்னாள் முதலமைச்சரின் இழப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று ஒரு நாள் கேரளாவிற்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதே போல் , பெங்களூரில் அணைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்காக, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் 26க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.