எதிா்கட்களின் இந்திய கூட்டணி குறித்து விமா்சித்த பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே கடும் கண்டனம் தொிவித்துள்ளாா்.
நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில், பாஜக எம்.பி.க்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போதைய எதிர்க்கட்சிகள் நாடு கண்டிராத வகையில் "திசையற்றவை" என்றும், கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன் போன்ற இழிவுபடுத்தப்பட்ட அமைப்புகளின் பெயர்களில் இந்தியா என்ற வார்த்தை இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய இந்த நான்கு நாட்களில் பல பிரதிநிதிகள் விதி 267-ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று கடிதம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இது முதல் முறை இல்லை எனவும் 2016-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்தபோது விவாதம் நடத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டதாகவும், காங்கிரஸ் ஆட்சியிலும் விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாகவும்" குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "மணிப்பூர் பற்றி எரிவது குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம் என தொிவித்த மல்லிகார்ஜுன கார்கே, இது குறித்து பேச பிரதமர் ஏன் இங்கு வரவில்லை என்றும், மணிப்பூர் விவகாரத்திற்கு பதிலாக பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்" என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிக்க || மதுவை, பாட்டிலில் விற்கும் பொழுது, ஆவின் பாலை விற்க முடியாதா?..உயர் நீதிமன்றம் சராமாரி கேள்வி!!