பிரதமர் மோடிக்கு திட்டமிடப்பட்ட சர்வதேச பயணங்கள் மற்றும் உள்நாட்டு திட்ட செயல்பாடுகள் எதுவும் இல்லாத ஜூன்-ஜூலை மாதங்களில் பொருத்தமான தேதிகள் குறித்து இரு தரப்பு அதிகாரிகளும் விவாதிப்பதாக கூறப்படுகிறது.
அழைப்பு:
இந்த கோடையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். எவ்வாறாயினும், பயணத்தின் தேதிகள் குறித்து இதுவரை சரியான தெளிவு இல்லை என்பதோடு இரு நாட்டு அதிகாரிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சார்பில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வருவதற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருத்தமான தேதி:
இரு நாட்டு நிர்வாகங்களும் இந்த அழைப்பை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளன. இரு தரப்பு அதிகாரிகளும் ஜூன்-ஜூலை மாதங்களில் பொருத்தமான தேதிகளைப் பற்றி விவாதிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. பயணத்தின் போது அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டின் உறுப்பினர்களையும் மோடி சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு முன் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணங்கள் மற்றும் உள்நாட்டு பயணங்கள் எதுவும் இல்லை.
பயணம் குறித்து:
அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுவது மற்றும் வெள்ளை மாளிகையில் அரசு விருந்து போன்றவற்றை உள்ளடக்கிய இந்த அமெரிக்க பயணத்திற்கு குறைந்தபட்சம் சில நாட்கள் தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த அழைப்பு பிரதமர் மோடிக்கு எப்போது வழங்கப்பட்டது என்றும் பைடனின் அலுவலகம் சார்பாக அவருக்கு தனிப்பட்ட அழைப்பை வழங்கியது யார் என்பது குறித்தும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பிரதமரே பதவி விலகுங்கள்....தொடர்ந்து போராடிவரும் மக்கள்!!!