இந்தியா

சிறுநீர் கழித்ததால் பறிபோன வேலை...மிஸ்ரா செய்தது என்ன?!!

Malaimurasu Seithigal TV

ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ராவை பெங்களூருவில் இருந்து டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மிஸ்ரா:

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கையில் வயதான பெண் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ராவை போலீசார் கைது செய்துள்ளனர்.  பல நாள் தேடுதலுக்கு பிறகு நேற்று இரவு பெங்களூருவில் இருந்து சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீஸ் கைது செய்தது.  விசாரணையின் போது, ​​குற்றவாளி பெங்களூரில் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது, இதைத் தொடர்ந்து பெங்களூருவில் போலீசார் ஒரு குழுவை அனுப்பி அவரைக் கைது செய்தது. 

நடந்தது என்ன?:

நவம்பர் 26 ஆம் தேதி, நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தபோது, ​​போதையில் வயதான பெண்மணி மீது சங்கர் மிஸ்ரா சிறுநீர் கழித்ததாகக் கூறப்பட்டது. தவறை உணர்ந்த சங்கர் மிஸ்ரா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டதோடு மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருந்தார்.  இருப்பினும், இந்த விவகாரம் குறித்து ஏர் இந்தியா நிர்வாகத்திடம் அந்தப் பெண்மணி புகார் அளித்ததின் அடிப்படையில், ஜனவரி 4 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். 

வேலை பறிப்பு:

குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த நிதி நிறுவனமான வெல்ஸ் பார்கோவின் இந்தியப் பிரிவில் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.   இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்பட்டதை அடுத்து, நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டவரை பணிநீக்கம் செய்துள்ளது. 

-நப்பசலையார்