"இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது தான், உண்மையான நண்பன் யார் என தெரிந்தது" என்று இலங்கை நீர்வளம் மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
கொழும்பு செல்வதற்கு சென்னை பன்னாட்டு விமான நிலையம் இலங்கை நீர்வளம் மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வந்துள்ளார். அப்பொழுது பேசிய ஜீவன் தொண்டமான், "மலையக தமிழர்கள் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் ஆகிறது. அதற்கான விழாவிற்கு அழைப்பு கொடுக்க, அடுத்த மாதம் மீண்டும் இந்தியா வரவுள்ளோம். இந்தியாவிற்கும், இலங்கைக்குமான உறவு மற்ற நாடுகளை விட நெருக்கமான உறவு" என புகழ்ந்துள்ளார்.
மேலும், "இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது தான், உண்மையான நண்பன் யார் என தெரிந்தது. இந்தியாவின் நட்பு மற்ற நாடுகளை விட பொருளாதாரத்தை தாண்டி தனித்துவமானது. இந்திய ரூபாயை டாலர், யூரோ போன்று இலங்கையில் பொது பணமாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது", என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையான UPI இலங்கையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || புதுமுக இயக்குநரின் அரசியல் கதையில் செல்வராகவன்!!