காசி தமிழ் சங்கமத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சரை ஏன் அழைக்கவில்லை என்று திமுக எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
காசி தமிழ் சங்கமம்:
”ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடந்தது. இந்த நிகழ்ச்சி ஒரு மாத காலம் நடைபெற்றது. இதை பிரதமர் மோடி நேரில் சென்று தொடங்கி வைத்தார். மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட காசி தமிழ்ச் சங்கமானது, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் காசி இடையே உள்ள வரலாற்று தொடர்புகளை மீண்டும் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
புறக்கணிப்பும் பதிலும்:
அப்போது காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டுக்கு அழைப்பு அனுப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. தற்போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாட்டு அறிஞர்களை அழைக்காததற்கான காரணங்கள் மற்றும் நிகழ்ச்சிக்கான செலவு விவரங்கள் குறித்து மாநிலன்களவியில் கேள்வி எழுப்பியிருந்தாா்.
அதற்கு இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், முதலமைச்சருக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டதாகவும், செலவு விவரங்களை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த துறைகளே பாா்த்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.