”மம்தா பானர்ஜியும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியும் தங்களை ஏழைகள் என்று கூறிக் கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள ஐபோன்களைப் பயன்படுத்துகிறார்கள்.” என பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் பொதுக் கூட்டத்தில் விமர்சித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் பொதுக் கூட்டத்தில் பேசுகையில், மம்தா பானர்ஜியும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியும் தங்களை ஏழைகள் என்று கூறிக் கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள ஐபோன்களைப் பயன்படுத்துகிறார்கள்.
மக்களை முட்டாளாக்க முடியாது:
"இனிமேலும் மேற்கு வங்காள மக்களை முட்டாளாக்க முடியாது. மம்தா பானர்ஜியும் அவரது மருமகனும் தங்களை ஏழைகள் என்று கூறுகின்றனர், ஆனால் அவர்கள் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் வாழுகிறார்கள் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஐபோன்களைப் பயன்படுத்துகிறார்கள்." என பாஜக தலைவர் திலீப் கோஷ் அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தூக்கமின்றி தவிக்கும் மம்தா:
மற்றொரு ட்வீட்டில், கோஷ் டிஎம்சியை தாக்கி, "மக்கள் சாப்பிட உணவின்றி தவித்தபோது நீண்ட நேரம் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தார். வேலையில்லாத இளைஞர்கள் வேலைக்காக ஓடிக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் மம்தா கவலையில்லாமலேயே இருந்தார். ஆனால் தற்போது திரிணாமுல் காங்கிரஸின் திருடர்கள் தொடர்ந்து பிடிபடுகிறார்கள், இது மம்தா பானர்ஜியை தூங்கவிடாமல் செய்துவிட்டது.” என விமர்சித்துள்ளார்.
ஊழலால் திணறும் திரிணாமுல்:
உண்மையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் அவரது அரசாங்கமும் பல முனைகளிலும் ஊழலால் சிக்கி தவிக்கிறது. முதலில் மம்தா அரசின் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டது. இதற்குப் பிறகு, விலங்குகள் கடத்தல் வழக்கில் அரசின் அமைச்சர்கள் பலர் பிடிப்பட்டனர். இது தவிர, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியே நிலக்கரி ஊழல் வழக்கில் விசாரணையை தற்போது எதிர்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க: பீகாரில் நிதிஷை வீழ்த்த பாஜகவின் திட்டம் என்ன??