இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2022-23ஆம் ஆண்டு 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது உலக வங்கி. அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதியம் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2022 இல் 6.8% ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
உலகம் மந்தநிலைக்கு செல்லும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் ராஜீவ் குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.
நிச்சயமற்ற உலக நிலைமைகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் எனவும் ஆனால் 2023-24ல் இந்தியப் பொருளாதாரம் ஆறு முதல் ஏழு சதவிகிதம் என்ற விகிதத்தில் வளரும் எனவும் உறுதியளித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில், உலகப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்லும் எனவும் அறிக்கையில் கூறியுள்ளார் ராஜீவ் குமார்.
இந்தியாவில் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் இல்லை என்பது நல்ல விஷயம் என்று கூறிய ராஜீவ் உலகளாவிய நிலைமைகளால் நமது வளர்ச்சி எதிர்மறையாக பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், 2023-24ல் 6-7% வீத வளர்ச்சியை இந்தியா பதிவு செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார்.
உலக வங்கி 2022-23 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை 6.5 சதவீதமாகக் குறைத்து மதிப்பிட்டிருந்தாலும் சர்வதேச நாணய நிதியம்இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2022 இல் 6.8% ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.