இந்தியா

”இரு இந்துஸ்தான் கொள்கை”யை பின்பற்றுகிறதா இந்தியா!!!

Malaimurasu Seithigal TV

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை பயணத்தின்' போது மக்களை சந்திப்பதோடு சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவும் அவர் ட்விட்டரில் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கியுள்ளார். 

தொழிலதிபர்களின் நண்பன்:

பிரதமர் மோடியை குறிப்பிட்ட தொழிலதிபர்களின் நண்பர் என ராகுல் விமர்சித்துள்ளார்.  மேலும், பெரிய தொழிலதிபர்களின் பில்லியன் கணக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றும் பதிவிட்டுள்ளார்.  ஆனால், ஒரு விவசாயியோ அல்லது சிறு வியாபாரியோ சிறு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் கூட கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் என்று கூறி சிறையில் அடைக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி

இரு இந்துஸ்தானத்தின் மன்னன்:

”இந்தியா ஒற்றுமை பயணம் எல்லாவிதமான அநீதிக்கும் எதிரானது. மன்னரின் இந்த 'இரு இந்துஸ்தான்' கொள்கையை இந்தியா ஒருபோதும் ஏற்காது. பணம் ஒருபோதும் மறைந்துவிடாது. அது நாட்டின் சில பணக்கார தொழிலதிபர்களின் பாக்கெட்டுகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.  இனிமேலும் இது போன்ற அநீதியை அனுமதிக்க மாட்டோம்.” என ட்விட்டரில் பதிவிடுள்ளார் ராகுல்.