இந்தியா

"விசாரணை மட்டும் பலிக்காது...குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" அசோக் கெலாட்

Malaimurasu Seithigal TV

உயிர்களை பலிவாங்கிய இந்த மோசடி முழுமையாக வெளியில் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.  விபத்து குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். 

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்:

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அகமதாபாத்தில் பேசிய அவர், மோர்பியில் நடந்த விபத்து குறித்து கேள்விகளை எழுப்பினார். மோர்பி சம்பவம் அலட்சியத்திற்கு மிகப்பெரிய உதாரணம் என்று கூறியுள்ளார்.

விசாரணை மட்டும் பலிக்காது என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தற்போது வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார் கெலாட்.

ஆறுதல் கூறிய கெலாட்:

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அசோக் கெலாட் சந்தித்து ஆறுதல் கூறினார். இத்துடன், பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று, இறந்த அனைவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். 

பெரும் அலட்சியம்:

பாலம் விபத்தில் காயமடைந்தவர்களை மோர்பி சிவில் மருத்துவமனையில் முதல்வர் கெலாட் சந்தித்து நலம் விசாரித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், மோர்பி சம்பவம் பெரும் அலட்சியத்திற்கு எடுத்துக்காட்டு. இவ்வளவு பெரிய விபத்து குறித்து விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அலட்சியத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார் அசோக் கெலாட்.

நன்றி தெரிவித்த கெலாட்:

இவ்வளவு பெரிய உயிர்களை பலிவாங்கிய இந்த மோசடி முழுமையாக வெளியில் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பேசினார் கெலாட்.  இந்த விபத்து குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மோர்பியில் விபத்து நடந்த இடத்திற்கு வந்த கெலாட், விபத்து பற்றிய முழு தகவலையும் பெற்றார்.

மேலும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் அசோக் கெலாட்.

-நப்பசலையார்