இந்தியா

கீழே விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்: விமானி, துணை விமானியை தேடும் பணி தீவிரம்!

ஜம்மு-காஷ்மீரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர், அணையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி மற்றும் துணை விமானியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Malaimurasu Seithigal TV

ஜம்மு-காஷ்மீரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர், அணையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி மற்றும் துணை விமானியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் தாழ்வான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரஞ்சித் சாகர் அணையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானியும், துணை விமானியும் இருந்தனர். மாயமான இருவரையும் தேடும் பணியில் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.