இந்தியா

”மன் கி பாத்” நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி...சொன்னது என்ன?

Tamil Selvi Selvakumar

அமைதி, ஒற்றுமை போன்ற உலகளாவிய நலன் சார்ந்த சவாலான விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை:

பிரதமர் மோடி ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலி வழியே “மன் கி பாத்” நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்நிகழ்ச்சி மூலம் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, அம்ரித் கால் திட்டத்தின் கீழ், ஜி20 தலைமைத்துவம் பெற்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.

நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்ற கருப்பொருளை கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்திய இசை கருவிகளின் ஏற்றுமதி 3 புள்ளி 5 மடங்கு அதிகரித்து உள்ளதாக மோடி தெரிவித்த மோடி, அமைதி, ஒற்றுமை போன்ற உலகளாவிய நலன் சார்ந்த சவாலான விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது என்று தெரிவித்தார்.