இந்தியா

வரலாற்று சிறப்புமிக்க பணியில் ஈடுபட்டுள்ளேன்... ராகுல் காந்தி!!

Malaimurasu Seithigal TV

2024 தேர்தலுக்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க பணியில் ஈடுபட்டுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தியை சந்தித்தனர்.  

தொடர்ந்து நால்வரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது பேசிய நிதிஷ்குமார், 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில், அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சிப்போம் எனவும் விரைவில் அதற்காக கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். 

அவரை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, 2024ம் ஆண்டு தேர்தல் ஒரு சித்தாந்தப் போராட்டம் எனவும் இந்தியா மீதான கருத்தியல் போர் எனவும் குறிப்பிட்டார்.   மேலும் இதற்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச்சிறப்பு மிக்க பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்நிலையில் பாரம்பரியமிக்க முறையில் நால்வரின் சந்திப்பு நடைபெற்றதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றுமையுடன் போராட தயாராகி வருவதாகவும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.