2,400 கிலோ வெடிமருந்துகளை மீட்டது தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்தது என்ஐஏ. இந்த வெடிபொருட்கள் மியான்மர் அரசுக்கு எதிராக போராடும் குழுவிற்காக தயாரிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்:
மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் மாவட்டத்தில் இருந்து 2.76 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மிசோரம் போலீசார் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் விலை ரூ.13.8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை இரவு 11:45 மணியளவில், ஐஸ்வால் மாவட்டத்தில் உள்ள ஜொனுவாம் காவல் நிலையத்தின் அருகில் 22 கருப்பு பாலித்தீன் பைகள் மீட்கப்பட்டதாக மிசோரம் காவல்துறை தெரிவித்திருந்தது. சோதனையில், மொத்தம் 2.76 கிலோ எடையுள்ள 215 ஹெராயின் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
மியான்மர் அரசுக்கு எதிரான சதி?:
இதனுடன் 2,400 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டது தொடர்பாக மேலும் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது. இந்த வெடிபொருட்கள் மியான்மர் அரசுக்கு எதிராக போராடும் குழுவிற்காக தயாரிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. மிசோரம் காவல்துறை தற்போது விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: புரூஸ் லீயின் மரணத்தில் 42 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம்...மரணத்திற்கான காரணம் இதுதான்!!!