இந்தியா

விலங்குகளுக்காக 12 ஆயிரம் கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொள்ளும் குஜராத் இளைஞர்...!!

Malaimurasu Seithigal TV

உலகில் உள்ள விலங்குகளுக்காக குஜராத்தை சேர்ந்த இளைஞர் இந்தியா முழுவதும் 12 ஆயிரம் கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.  

ஒரு வருடத்தில்:

குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த தேவ்சிபாய் மகன் கல்பேஷ்.  மத நம்பிக்கை கொண்ட இவர் இந்தியாவில் உள்ள முக்கியமான 12 சிவாலயங்களை ஒரு வருடத்திற்குள் நடை பயணமாக சென்று தரிசிக்க முடிவு செய்துள்ளார்.  

படைப்பாளர்:

மேலும் உலகில் உள்ள விலங்குகள் சமீப காலமாக காலநிலை மாற்றத்தால் உயிரிழந்து வருகின்றன. படைப்பின் படைப்பாளரான சிவபெருமான் எல்லையற்றவர், அவரிடம் பிரார்த்தனை செய்வதன் மூலம், மனித ஆசைகள் நிறைவேறுகின்றன.  எனவே விலங்குகளின் நலன் கருதி இந்தியாவில் உள்ள 12 சிவாலயங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 

90 நாட்கள்:

கடந்த ஆண்டு டிசம்பர் 16 ம் தேதி குஜராத்தில் நடை பயணத்தை தொடங்கியவர் மகாராஷ்டிரா, நாசிக், புனே, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் செல்லவுள்ளார்.  தற்போது வரை 90 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.  தினசரி 50 முதல் 65 கிலோ மீட்டர் நடக்கும் இவர் இரவு ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ணுவதாகவும் தெரிகிறது.  மற்ற நேரங்களில் டீ, பிஸ்கட், தண்ணீர் உள்ளிட்டவற்றை மற்றும் அருந்து விட்டு நடை பயணத்தை மேற்கொள்கிறார். 

டிசம்பர் 16 ஆம் தேதி முதல் தற்போது வரை நாகேஸ்வர்,சோமநாத், ஹரித்வார், காசி உள்ளிட்ட 5 சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.  தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதும் 12 ஆயிரம் கிலோமீட்டர் நடந்து சென்று விலங்குகளுக்காக சிவபெருமான் ஆலயங்களில் தரிசனம் செய்து அனைவரிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.   

பரமக்குடியில்:

நடை பயணம் மேற்கொள்ளும் போது இவரின் நண்பர்கள் இருவர் காரில் உடைமைகளை எடுத்து வருகின்றனர்.  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொளுத்தும் வெயிலிலும் சோர்வடையாமல் நடந்து செல்லும் இவரை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து கடத்து செல்கின்றனர்.

இதையும் படிக்க:  மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை....!