தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை அவசர பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
தி.மு.க-க்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே வெகுகாலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.
அப்போது பேசிய அவர் நீட் விலக்கு என்பது அறிவு சார்ந்த மாணவர்களை மாற்றித்திறனாளியாக மாற்றும் செயல் எனவே நீட் விலக்கிற்கு கையொப்பமிட மாட்டேன் என திட்ட வட்டமாக கூறியிருந்தார். ஆளுநர் அவ்வாறு கூறியிருந்த மறு நாளே, சென்னை குரோம்பேட்டையில், 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்து, 3 வது முறை எழுதவிருந்த ஜெகதீஸ்வரன், தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனை கண்டித்து திமுக சார்பாக வரும் 20-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர பயணமாக விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க || வெளிநாட்டு படிப்புகள்: யு.ஜி.சியின் புதிய கட்டுப்பாடுகள்!!