இந்தியா

ஞானவாபி வழக்கு 2021 முதல் இன்று வரை!!!

Malaimurasu Seithigal TV

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள  காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும், அதை தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு:

இதையடுத்து ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை:

அதன்படி, இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் வாரணாசி நீதிமன்றம் விசாரித்து நிறைவு செய்துள்ளது. குறிப்பாக மஸ்ஜித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து என்றும், எனவே இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை’ என்றும் வாதிட்டுள்ளார்.

ஒத்திவைப்பு:

ஆனால் மனுதாரர் தரப்பிலோ, ‘கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது’ என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி  ஏ.கே.விஸ்வேஷ், வழக்கின் இறுதி தீர்ப்பை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தார். 

ஞானவாபி வழக்கு இன்றுவரை:

ஆகஸ்ட், 2021: தினசரி மா ஷிரிங்கர் கவுரி அம்மனுக்கு வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் முறையீடு


ஏப்ரல்,2022 : வழக்கறிஞர் ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையில் குழு அமைத்து மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மே 6 :  அஜய் மிஸ்ரா ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக அஞ்சுமன் இஸ்லாமிய மஸ்ஜித் கமிட்டி பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன் மசூதியில் ஆய்வு பணி தொடக்கம்

மே 12: மிஸ்ராவை குழுவில் இருந்து நீக்க நீதிமன்றம் மறுப்பு, சிறப்பு வழக்கறிஞர் ஆணையராக விஷால் சிங்கை நியமித்து ஆய்வு அறிக்கையை மே.17ல் சமர்பிக்க நீதிபதி உத்தரவு

மே 14: மசூதி வளாகத்தை ஆய்வு செய்யும் பணி மீண்டும் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது

மே 19: மசூதி வளாகத்தின் ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

மே 20: பிரச்னையின் சிக்கல் மற்றும் சர்ச்சைக்குரிய விவகாரம் என்பதால் சுமார் 30 வருடம் அனுபவமுள்ள நீதிபதி தலைமையில் வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மே 26: மசூதி வளாகத்தை யார் பரமரிப்பது தொடப்பான வழக்கு விசாரணைக்கு வந்தது

ஆக.24: இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தரப்பின் முழு வாதத்துக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அஜய் கிருஷ்ணா விஷ்வேஷா 

மாவட்ட நீதிமன்றம்:

ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்தக் கோரி ஐந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இஸ்லாமியாகள் சார்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.