கர்நாடக மாநிலத்தில் அனைத்து வகையான தேர்வுகளின்போதும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்தாண்டு ஹிஜாப் விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையானது. கடந்தாண்டு ஜனவரியில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கர்நாடக அரசு ஹிஜாப் அணிந்து மாணவிகள் பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்ட நிலையில் மாநில முழுவதும் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக அரசு சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்த பிறகு தற்பொழுது முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து அனைத்து தேர்தல்களிலும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரி தேர்வுகளில் மட்டுமின்றி அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாணவிகள் ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆகையால் காங்கிரஸ் அரசு எடுத்துள்ள முடிவு எந்த விதத்திலும் தவறான கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஹிஜாப் அணிந்து செல்ல கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்துத்துவா அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.