தமிழகத்தை பின்பற்றி தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு 18 லட்சம் மாணவ - மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.
இத்திட்டம் குறித்து கடந்த மாதம் தெலங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால் உட்பட அரசு அதிகாரிகள் சிலர், வட சென்னை உள்ளிட்ட பல பகுதியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானா அரசு அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இத்திட்டத்தை வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க || விபத்தில் கால் முறிவு... அட்டைப்பெட்டிகளை வைத்து கட்டிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!!