மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் முதல் திரவ இயற்கை எரிவாயு ஆலையை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 8 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்வதால், நாட்டிற்கு இது மிகப் பெரிய சவாலாக உள்ளது என்று தெரிவித்தார்.
எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக, உயிரி இயற்கை எரிவாயு, உள்நாட்டு எத்தனால், திரவ இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோலிய எரிபொருள் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையில் இன்ஜின்கள் பொருத்துவதை கட்டாயமாக்குவது குறித்து இன்னும் 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால், நாட்டில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் ஏற்படும் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்றும் கூறினார்.