விமானப்படையின் முதல் மூன்று பெண் விமானிகளில் ஒருவரான ஸ்குவாட்ரன் லீடர் அவனி சதுர்வேதி, பயிற்சியில் பங்கேற்பதற்காக விரைவில் ஜப்பான் செல்லவுள்ளார்.
ஜப்பானில் பயிற்சி:
முதன்முறையாக இந்திய விமானப்படையின் பெண் போர் விமானிகள் நாட்டிற்கு வெளியே நடைபெறவுள்ள போர்பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த போர் பயிற்சி ஜப்பானில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னர், இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு குழுவினருடன் பயிற்சியில் பங்கேற்றிருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் சண்டைத் திறமையை வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை.
பங்கேற்பவர்:
விமானப்படையின் முதல் மூன்று பெண் விமானிகளில் ஒருவரான ஸ்குவாட்ரான் லீடர் அவனி சதுர்வேதி, பயிற்சியில் பங்கேற்பதற்காக விரைவில் ஜப்பான் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்னி SU-30MKI இன் போர் விமானியாவார்.
எங்கு? எப்போது?:
விமானப்படையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, 'வீர் கார்டியன் 2023' என்ற 10 நாள் நடைபெறவுள்ள இந்த போர் பயிற்சியானது ஜனவரி 16 முதல் ஜனவரி 26 வரை ஓமிடமாவில் உள்ள ஹைகுரி விமான தளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விமானநிலையங்கள் மற்றும் இருமா விமானத் தளங்களில் நடைபெறும்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: சூடுபிடிக்கும் ராமர் கோயில் விவகாரம்: நீங்க என்ன பூசாரியா? அமித்ஷா - கார்கே வார்த்தை மோதல்..!