மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் 135 பேர் உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்களில் ஏராளமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் காவல்துறை ஏற்கனவே 9 பேரை கைது செய்துள்ளது. பாலத்தின் டிக்கெட் சேகரிப்பாளர் முதல் ஒப்பந்ததாரர் வரை இந்த குற்றவாளிகளுள் அடங்கும்.
குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் விபத்துக்குள்ளானதில் நிர்வாகம் முதல் பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. நகராட்சி தலைமை அதிகாரி சந்தீப் சிங் ஜாலா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் அரசு அதிகாரி மீது எடுக்கப்பட்ட முதல் பெரிய நடவடிக்கை இதுவாகும்.
சமீபத்திய கைது குறித்து, மோர்பி மாவட்ட அதிகாரி ஜி. டி.பாண்டியா கூறுகையில், ”மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப் சிங் ஜாலாவை, மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை இடைநீக்கம் செய்துள்ளது,' என்று கூறியுள்ளார்.
மோர்பி நகராட்சியானது பாலத்தை பழுதுபார்த்து பராமரிக்கும் ஒப்பந்தத்தை 15 ஆண்டுகளுக்கு ஓரேவா குழுமத்திற்கு வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.