இந்தியா

60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய தவறினால்... உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!!

Malaimurasu Seithigal TV

குற்றவியல் தண்டணைச் சட்டம் பிரிவு 167ன் படி, குற்றஞ்சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டதிலிருந்து 60 நாள்களுக்குள் விசாரணை அமைப்பு அவர் மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

குற்றம் செய்து சிறையிலடைக்கப்படும் நபருக்கு இயல்பாகவே ஜாமீன் வழங்கும் முறையானது நடைமுறையிலுள்ளது.  சில விசாரணை அமைப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஜாமீனை கிடைக்க முடியாமல் செய்வதற்காக விசாரணை முடியும் முன்னரே குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதாக உச்சநீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும் குற்றச்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய தவறினால் அவர்களுக்கு தானாகவே ஜாமீன் வழங்கப்படும் எனவும் சில வகை குற்றங்களுக்கு 90 நாள்கள் வரை நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

குற்றவியல் வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதியின் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதனோடு அவருக்கும் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

-நப்பசலையார்