இந்தியா

குஜராத், இமாச்சல பிரதேசத்தில் விரைவில் தேர்தலா?!!!

Malaimurasu Seithigal TV

குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில்  சட்டப்பேரவை தேர்தல் தேதி தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்:

குஜராத் மாநிலத்தில் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 111 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

மும்முனைப் போட்டி:

இதையடுத்து இந்த அரசின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைவதால், விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு குஜராத்தில் பாஜக, காங்கிரஸுடன், களம் காண திட்டமிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தீவிரம் பிரசாரம் செய்து வருகிறார். 

இமாச்சல பிரதேசம்:

இதேபோல் 68 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட இமாச்சல பிரதேச மாநிலத்திலும் 44 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவை சேர்ந்த ஜெய் ராம் தாக்கூர் ஆட்சி செய்து வருகிறார். இவரது பதவிக்காலமும் வருகிற டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுவதால், விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. 

பிற்பகல் 3 மணிக்கு...:

இந்தநிலையில், இந்த இரு மாநிலங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் நிரலை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

                                                                                         -நப்பசலையார்