இந்தியா

யப்பா தேர்தல் நன்கொடை இவ்வளவா...எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை?!!!

Malaimurasu Seithigal TV

கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட அரசியல் நிதியுதவி குறித்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் அறிக்கை கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடைகளை வெளியிட்டுள்ளது.

தேர்தல் பத்திரம்:

குஜராத் சட்டசபையின் முதல் கட்ட தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற அரசியல் நன்கொடைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.  

தேர்தல் நன்கொடை:

குஜராத்தின் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடையில் 94 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. காங்கிரசுக்கு 5 சதவீதம் மட்டுமே தேர்தல் நன்கொடையாக கிடைத்துள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.  

எந்தக் கட்சிக்கு எவ்வளவு:

அறிக்கையின்படி, மார்ச் 2018 முதல் அக்டோபர் 2022 வரை அனைத்துக் கட்சிகளும் மொத்தம் ரூ.174 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன.  அதில் பாஜகவின் பங்கு ரூ.163 கோடி.  

காங்கிரஸ்ஸுக்கு 10.5 கோடி நன்கொடையும் ஆம் ஆத்மி கட்சி குறைந்த பட்சமாக ரூ.32 லட்சத்தை பெற்றுள்ளது.  அதேசமயம் மற்ற கட்சிகளுக்கு ரூ.20 லட்சம் கிடைத்துள்ளது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்:

ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் அறிக்கை வெளியான பிறகு, எதிர்க்கட்சிகள் பாஜகவை குறிவைக்கத் தொடங்கியுள்ளன.

-நப்பசலையார்