இந்தியா

ED ரெய்டுகளும்....நிரூபிக்கப்படாத கருத்துகளும்...

Malaimurasu Seithigal TV

கடந்த 8 ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது 3,000 ED ரெய்டுகள் நடந்ததாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறியதை அடுத்து மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பதிலளித்துள்ளார்.

ரெய்டுகள்:

கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது 3,000 ED ரெய்டுகள் நடத்தப்பட்டது எனக் கூறிய ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங்கின் கருத்துக்குப் பிறகு தன்கர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.  இவ்வளவு சோதனைகள் நடந்திருந்தாலும் 23 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்க முடிந்தது என்று சிங் கூறியுள்ளார்.  இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​சபை புனிதமான மன்றம் எனவும் சான்றளிக்கப்படாத இதுபோன்ற உண்மைகளை இங்கு வைத்து பேச அனுமதிக்க முடியாது எனவும் என அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

நிரூபிக்கப்படாத கருத்துக்கள்:

மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் எம்.பி.க்கள் ஆதாரமற்ற மற்றும் நிரூபிக்கப்படாத கருத்துக்களை வெளியிடுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏனெனில் இது சபையின் சிறப்புரிமையை மீறுவதாகும் எனவும் சபையில் பேச்சு வார்த்தைகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.  இது தொடர்பாக சபையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்