இந்தியா

நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த கோதுமை விலை..! காரணம் என்ன?

ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியாக, நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

Tamil Selvi Selvakumar

ஐரோப்பிய நாடுகளுக்கு தேவையான கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் விநியோகித்து வந்தது. தற்போது அங்கு நிலவும் போர் சூழல் காரணமாக, உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு, உலக நாடுகள் பிற நாடுகளின் உதவியை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர வரலாறு காணாத வெப்பம் தெற்கு ஆசியா நாடுகளில் கோதுமை விளைச்சலை பாதித்துள்ளது. இந்தநிலையில் இந்தியாவிலும் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு கிலோ கோதுமை 32.78 ரூபாய்க்கு அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 9.15 சதவீதம் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால்  ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.