நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களின் எதிரொலியாக டெல்லி உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நேபாளத்தில் 4.6 என்ற ரிக்டர் அளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் முதலாவதாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 6.2 என்ற ரிக்டர் அளவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் தெற்கு டெல்லி, என்.சி.ஆர் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால் அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் உடனடியாக வெளியேறினர். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் சாலையில் தஞ்சமடைந்தார்.
நேபாள நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஹரியானாவின் குருகிராம், ராஜஸ்தானின் ஜெய்பூர், சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து கொண்டு சாலையில் குவிந்தனர்.
உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, ஹாபூர், அம்ரோஹா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சத்தீஸ்கா், தெலங்கானா செல்லும் பிரதமா்...ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட ஆலை அா்ப்பணிப்பு!