இந்தியா

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து விவாதம்... நடவடிக்கை எடுக்கப்படுமா?!!

Malaimurasu Seithigal TV

ஆஸ்திரேலிய பிரமதர் ஆண்டனி அல்போனிஸ்-க்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்போன்ஸ், நேற்று ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் கண்டுகளித்தார். அதனை தொடர்ந்து மும்பையில் இயங்கி வரும் டப்பாவாலா முறையையும், விக்ராந்த் போர்க்கப்பலையும் பார்வையிட்டார் ஆஸ்திரேலிய பிரதமர். 

இன்று காலை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதனை தொடர்ந்து அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். 

வரவேற்புக்கு பிறகு பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு, இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.