இந்தியா

அவதூறு வழக்கு - ராகுல் காந்தி நேரில் ஆஜராகத் தேவையில்லை...நீதிமன்றம் உத்தரவு!

Tamil Selvi Selvakumar

அவதூறு வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராக, பாட்னா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மோடி சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்த ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு வழக்கும் ரத்து செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையின் போது, நேரில் ஆஜராகி விளக்கமளிக்க பாட்னா கீழமை நீதிமன்றம் ராகுல்காந்திக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த உத்தரவை தடை செய்துள்ள பாட்னா உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணைத் தேதியான மே 15ம் தேதி வரை ராகுல்காந்தி நேரில் ஆஜராகத் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.