இந்தியா

உறுதி செய்யப்பட்டதா ”ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்”...உச்சநீதிமன்றம் கூறுவதென்ன?!!

Malaimurasu Seithigal TV

மத்திய அரசு ஏற்றுக்கொண்ட ’ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்’ கொள்கையை உறுதி செய்தது.  அது எந்த அரசியலமைப்பு சட்டங்களாலும் பாதிக்கப்படவில்லை எனவும் அது தன்னிச்சையானது அல்ல எனவும் தெரிவித்துள்ளது. 

காலஅவகாச கோரிக்கை:

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அனைத்து தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற திட்டத்தின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடுவை மார்ச் 15, 2023 வரை நீட்டிக்கக் கோரி மத்திய அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.  

கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு கோரிக்கை வைப்பது இது இரண்டாவது முறையாகும்.  இதற்கு முன்னதாக ஜூன் மாதம், நிலுவைத் தொகையை கணக்கிட்டு செலுத்த மூன்று மாத கால அவகாசத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தது. 

உச்சநீதிமன்றம் பதில்:

உச்ச நீதிமன்றம் மார்ச் 16 அன்று மத்திய அரசு ஏற்றுக்கொண்ட ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் கொள்கையை உறுதி செய்தது.  மேலும் இக்கொள்கை எந்த அரசியலமைப்பு சட்டங்களாலும் பாதிக்கப்படவில்லை எனவும் அது தன்னிச்சையானது அல்ல எனவும் தெரிவித்துள்ளது.  இந்த நிலுவைத் தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்துமாறும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

-நப்பசலையார்