இந்தியா

"பொது சிவில் சட்டம் அவசியமானது" தமிழிசை வாதம்!

Malaimurasu Seithigal TV

பொது சிவில் சட்டம் இன்றைய சூழலில் மிக அவசியமானது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நெல்லைக்கு வருகை தந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், நாட்டில்  அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இச்சட்டம் மதத்திற்கு எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் நினைப்பதாகவும், இன்றைய சூழலில் பொது சிவில் சட்டம் அவசியமானது என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளையில், எதிர் கட்சிகள் கூட பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்க தொடங்கியிருப்பதாக தெரிவித்த அவர், காவிரி நதிநீர் பங்கீட்டில் புதுவைக்கு கிடைக்கும் தண்ணீர் எந்த விதத்திலும் குறைத்து விடாது என்பதை அதற்கான ஆணையத்தில் தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகவில் எந்த கட்சி அமைக்கிறதோ அதற்கேற்ப இங்குள்ள அரசு அரசியல் செய்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றுவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆளுநர் அதிகாரம் தொடர்பான தான் எந்த அரசியலும் செய்யவில்லை என்றும் புதுச்சேரி, தெலுங்கானா மக்களுக்கு நல்லது மட்டும் தான்  செய்து வருகிறோம். அதுவும் தனக்கு இருக்கும் அதிகாரத்திற்கு உட்ப்பட்டு தான், தாம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.