இந்தியா

கொரோனா பரவல் இடையே...உலகம் முழுவதும் கோலாகல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...!

Tamil Selvi Selvakumar

கொரோனா பரவல் அச்சத்திற்கிடையே கிறிஸ்துமஸ் விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் தினவிழாவை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கோவாவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இந்த பிரார்த்தனையில், உறவினர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், கிருஸ்துமஸ் தாத்தா சிலையை உருவாக்கியுள்ளார். ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் கிறிஸ்துமஸ் தாத்தா சிலை முழுக்க முழுக்க கடற்கரை மணலினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பொதுமக்கள் கண்டுகளித்து செல்கின்றனர். 

அதேபோல் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் விதமாக  கிறிஸ்துவ மக்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திரத்தை கட்டி அலங்கரித்திருந்தனர். அலங்கார குடில்களை அமைத்து கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தும் தேவ மைந்தனை வரவேற்றனர். வீடுகளில் கூட்டு பிரார்த்தனை செய்த பின்னர் சுவையான பலகாரங்களை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்ந்தனர். கொரோனா பரவல் அச்சத்திற்கிடையே கிறிஸ்துமஸ் விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.